Pages


நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...


பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர்.    


உதராணமாக  
www.kumuthine.lk என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/GkguK அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக  www.kumuthine.lk  முகவரிக்கே வந்து விடும் . 

இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . 

உதாரணமாக
 www.kumuthine.lk என்ற இந்த முகவரியைhttp://adf.ly/GkguK இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . 




டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர 
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .

உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly தளத்தில் சேர இங்கு செல்லவும் .


இணையத் தளம் மற்றும் / வலைத்தளம் 
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது . 

adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம்முறையில் மாற்றி அமைக்கலாம் .

சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .
இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும்
                                                                                   
 



இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.
தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.
முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் மூலம் எவ்வாறு பணம் பெறலாம் என்பதனைப் பார்ப்போம்.
பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி விளம்பரங்களை வலைப்பதிவுகளில் இடுதல். பொதுவாக இவை உங்கள் பதிவு மிகப்பிரபலமாக இல்லாது விடின் பெருமளவு பணத்தினை உருவாக்கி தரமாட்டா. ஆனாலும் பொழுதுபோக்காக நாங்கள் செய்கின்ற வலைப்பதிவு சிறிதளவு பணத்தினை ஈட்டித்தருமாயின் அது நல்லதுதானே?
இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் பலரும் அறிந்தது. கூகிள் அட்சென்ஸ்.
இங்கு செல்வதன் மூலம் ஒரு கணக்கை உங்களுக்கென்று உருவாக்கி கொண்டு உங்கள் வலைப்பதிவெங்கும் அவர்களது விளம்பரங்களை கீழே காட்டப்பட்டது போல வெளிப்படுத்த இயலும். பொதுவாக விளம்பரங்களின் மேல் சொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சொடுக்கிற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.(இந்த பதிவு பிடிச்சிருந்தா நீங்களும் கீழே இருக்கிற எனது விளம்பரத்தில் சொடுக்கி உதவலாம்)
இதைவிட பல பிரபல நிறுவனங்கள் வித்தியாசமான முறைகளின் மூலம் உங்கள் வலைப்பதிவிற்கு விளம்பரம் தரத்தயாராக உள்ளார்கள். இவர்களில் நான் பயன்படுத்துவது textlinkads நிறுவனத்தை. இவர்கள் உங்கள் வலைப்பதிவில் இடுகின்ற ஒவ்வொரு தொடுப்பிற்கும் மாதாமாதம் இவ்வளவு பணம் என்ற அடிப்படையில் பணம் வழங்குகிறார்கள். எவ்வளவுதரம் சொடுக்கியது எனப்து போன்ற விபரங்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.
இது எனது வலைப்பதிவில் இருக்கும் ஒரு தொடுப்பு சம்பந்தமான விபரம்.
இது ஒரு மாதத்தில் எனது வலைப்பதிவில் இருந்த தொடுப்பகளுக்கு மொத்தமாக அவர்கள் செலுத்திய பணம் பற்றிய விபரம்.
மாத முடிவில் உங்கள் கடனட்டைக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு காசோலையாக பணத்தை அனுப்பிவிடுவார்கள்.
கீழே இருக்கின்ற தொடுப்பில் சொடுக்கி நீங்களும் ஒரு கணக்கினை ஆரம்பித்து அவர்களது விளம்பரங்களை வெளியிட ஆரம்பியுங்கள்.
மேலும் இவ்வாறான சில இணையத்தளங்கள் பற்றிய விபரங்களை மேலும் ஒரு பதிவில் இடுகின்றேன். இப்பொழுது இரண்டாவது முறைக்கு போவோம்.
இணையத்தினூடாக வேலை செய்தல்.
இதற்கு நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்க தேவையில்லை. உங்களின் திறமைக்கேற்றவாறு பணம் சம்பாதிக்க முடியும். திறமையிருக்கின்ற அல்லது விருப்பம் இருக்கின்ற பலருக்கு இருக்கின்ற பிரச்சனையே இதற்கான வழிமுறைகள் தெரியாமைதான். கீழே அவற்றிற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
இதற்கு பொதுவாக இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று இதற்கான வழிகளை செய்துதருகின்ற இணையத்தளங்கள் மற்றையது இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்.
இதில் முன்னைய வழிமுறையைப்பற்றி இப்போது பார்ப்போம்.
இணையத்தூடாக வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தரும் இணையத்தளங்கள் பல உள்ளன. அவற்றில் என்னைப்பொறுத்தவரை இலகுவானது என கருதும் இணையத்தளங்கள் இரண்டு கீழே.
Elance


Elance
மேலே சொடுக்கி இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு கணக்கினை ஆரம்பித்து கொண்டால் உங்கள் திறமைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சனை உங்களை நீங்கள் சந்தைப்படுத்துவதுதான். அங்கே உங்களுக்கேற்ற வேலை ஒன்றினை நீங்கள் கண்டுகொண்டால் உடனே நீங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர் என்றும் உங்களால் எவ்வாறு அந்த வேலையை முடித்துக்கொடுக்க முடியும் என்றும் ஒரு கோரல் (Bid) ஒன்றினை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இங்க ஆகக்குறைந்த தொகை 50 அமெரிக்க டொலர்கள் என்பதால் சிறிய வேலைக்கே நீங்கள் நல்ல பணத்தினை சம்பாதித்து கொள்ள முடியும்.
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வேலை வகைகள்.
இந்த இணையத்தளமும் மேலே குறிப்பிட்டதைப்போன்றதுதான். இங்கு ஆகக்குறைந்த தொகை 30 அமெரிக்க டொலர்கள்.
நாங்கள் இப்பதான் வலைப்பதிவெண்டாலே என்னெண்டு பாத்திருக்கிறம். உதில கேட்டிருக்கிற விசயம் தெரியுமெண்டா நான் ஏன் இப்படி இருக்கிறன். இதைவிட சுகமான வேலை ஏதும் இருந்தா சொல்லு எண்டுற ஆக்களுக்குதான் கீழ இருக்கிற இணைத்தளம்.
இந்த இணையத்தளம் அமேசன் நிறுவனத்தின் ஒரு பகுதி. இங்கு நீங்கள் மிகச்சிறயளவு பணத்திற்கு சிறிய சிறிய வேலைகளை செய்ய முடியும். வீட்டில ஒரு பொழுதும் போகேல்ல நல்ல இணைய இணைப்பு இருக்கு எண்டு சொல்லுறாக்களுக்கு இது நல்ல இடம். இந்த படம் நல்லா இருக்கு. இது நல்லா இல்லை எண்டு சொன்னாலே காசு கிடைக்கும்.
போய் ஒரு இரண்டு வேலை செய்து பாருங்க.
இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்
இரண்டாவது முறையில வேலைகளை தேடிக்கண்டுபிடிக்கிறதே கஸ்டமான வேலை. என்னுடைய பங்கிற்கு கீழ ஒரு தொடுப்பு தந்திருக்கு போய் பாருங்க. அவ்வளவுதான்.

அடுத்த பதிவில ஒரு சிறந்த கோரல் (Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி விரிவா பாப்பம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கிhttp://adf.ly/GkguKசெய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.
கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.
"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.

விளம்பரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள்:

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்படாத வீடியோக்கள்:

1. வர்த்தக உரிமம் (Commercial license) இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்துவது.

2. காப்புரிமைப்பெற்ற பாடல்களை நீங்களோ அல்லது வேறு யாரோ பாடும் வீடியோக்கள்.

3. நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது.

4. காப்புரிமை இல்லாத மென்பொருள்களின் செயல்பாடுகளை படமாக்கப்பட்ட வீடியோக்கள்.

Youtube விளம்பரத்தில் இரண்டு கணக்குகள் உள்ளன. Youtube Monetizationமற்றும் Youtube Partnership.

Youtube Monetization என்பது நாம் அனைவரும் எளிதாக பெறக் கூடிய கணக்கு. இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்ற வீடியோவைத் தான் பார்க்கப் போகிறோம்.