Pages

"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.

விளம்பரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள்:

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்படாத வீடியோக்கள்:

1. வர்த்தக உரிமம் (Commercial license) இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்துவது.

2. காப்புரிமைப்பெற்ற பாடல்களை நீங்களோ அல்லது வேறு யாரோ பாடும் வீடியோக்கள்.

3. நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது.

4. காப்புரிமை இல்லாத மென்பொருள்களின் செயல்பாடுகளை படமாக்கப்பட்ட வீடியோக்கள்.

Youtube விளம்பரத்தில் இரண்டு கணக்குகள் உள்ளன. Youtube Monetizationமற்றும் Youtube Partnership.

Youtube Monetization என்பது நாம் அனைவரும் எளிதாக பெறக் கூடிய கணக்கு. இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்ற வீடியோவைத் தான் பார்க்கப் போகிறோம்.